News August 2, 2024
புதுவை முதல்வருக்கு நெடுங்காடு எம்.எல்.ஏ வாழ்த்து

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேர்வோருக்கு மாதம் ரூ.1000/-, மீனவர் நிவாரணம் 8000/-, முதல்வரின் புதுமைப்பெண் உள்ளிட்ட புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் இன்று அறிவித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
Similar News
News November 16, 2025
புதுச்சேரி: பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பொதுமக்களின் கருத்தை வடிவமைப்பதிலும், தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதிலும், நிர்வாகத்தில் பொறுப்புணர்வை நிலைநிறுத்துவதிலும் ஊடகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மை, துல்லியம் மற்றும் பாரபட்சமற்ற தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்துவது ஜனநாயகத்தின் அடித்தளம் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
News November 16, 2025
புதுவை: 2 வயது வரை தாய்ப்பால் அவசியம்!

புதுவை, ஜிப்மர் மருத்துவமனை குழந்தைகள் டாக்டர் ஆதிசிவம் விடுத்துள்ள செய்தியில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை, தேசிய பச்சிளம் குழந்தைகள் வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 1000 குழந்தை பிறப்பில் 24.9 பச்சிளம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இறந்து விடுகின்றன. இதனால் பிறந்த குழந்தைகளுக்கு 2 வயது வரை கண்டிப்பாக தாய்ப்பால் புகட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
News November 16, 2025
புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிறுவனத்தில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-12-2025 தேதிக்குள் <


