News December 6, 2024
புதுவை முதலமைச்சரின் வாழ்த்து செய்தி

புதுவையில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாள் இன்று (டிச.06) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்நாளில், ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கிட நாம் ஒன்றிணைந்து உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
Similar News
News November 18, 2025
காரைக்கால்: இரங்கலை தெரிவித்த எம்எல்ஏ!

நெடுங்காடு எம்எல்ஏ சந்திர பிரியங்கா, காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் தாயார் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காரைக்கால் ஆட்சியர் ரவி பிரகாஷ் தாயார் விஜயவாடாவில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் வருத்தமும் அடைந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பணிவுடன் பிரார்த்திக்கிறேன். அவருக்கும், அவருடைய குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
News November 18, 2025
புதுவை: மருத்துவ படிப்பிற்கான பட்டியல் வெளியீடு!

புதுவை சென்டாக் இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அரசு ஒதுக்கீட்டில் பல் மருத்துவம், ஆயுர்வேதம் 47 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் 73 பேரும், பல்மருத்துவம், ஆயுர்வேதம் & கால்நடை மருத்துவம் 130 பேரும் இடம் பெற்றனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் இன்று (நவ.18) தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.