News September 14, 2024
புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News August 11, 2025
புதுவை: ரூ.34,800 சம்பளத்தில் ஜிப்மரில் வேலை!

புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 446 செவிலியர்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கீகரிப்பட்ட பல்கலைகழகத்தில் B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக மாதம் ரூ.34,800 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் jipmer.edu.in என்ற இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 11, 2025
புதுவை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் 7 சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வெங்கடாசலத்தை தேடி வருகின்றது.
News August 10, 2025
புதுவை: இளைஞர் கொலை போலீஸ் மீது நடவடிக்கை

புதுச்சேரியில் ரெஸ்ட்டோ பாரில் நடைபெற்ற மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் தமிழக வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து அன்பழகன் இன்று (ஆக.10) செய்தியாளர்களிடம் கூறும்போது இளைஞர் படுகொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து பெரிய கடை காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.