News April 5, 2025
புதுவை மின்துறையில் 177 காலிப்பணியிடங்கள்

புதுச்சேரி மின்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மின் துறையில் குரூப்-சி அரசிதழ் பதிவு பெறாத பதவியான, கட்டுமான உதவியாளர் பணிக்கு 177 பேரை நிரப்ப உள்ளதாக மின்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி மதியம் 3 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News April 9, 2025
புதுச்சேரியில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசு அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் கட்டுமான உதவியாளர் பதவிக்கான 177 பணியிடங்களை அறிவித்துள்ளது. மாதச்சம்பளம் ரூ.19,900 – ரூ.63,200 வழங்கப்படும் என்றும், எஸ்எஸ்எல்சி, 2 ஆண்டுகள் எலக்ட்ரீஷியன்/வயர்மேன் பட்டயப்படிப்பில் கைவினைத்திறன் சான்றிதழ் பெற்ற ஆர்வமுள்ளவர்கள் மே 2, 2025 க்குள் இந்த <
News April 9, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, போலியான கால் சென்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போலி அப்ளிகேஷன் மூலம் மோசடி செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தெரியாத நபர்களிடமிருந்து whatsapp, instagram, Facebook மூலம் ஏதேனும் அழைப்புகள் வந்தால் அதை முற்றிலும் நம்ப வேண்டாம் என்றார்.
News April 9, 2025
சிறுமி கர்ப்பம்: வாலிபர் போக்சோவில் கைது

புதுவை கிராமத்தை சேர்ந்த ராகுல், பெயிண்டர். இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்பெண் கர்ப்பமடைந்து, பரிசோதனைக்காக புதுவை மருத்துவமனைக்கு சென்றபோது அப்பெண்ணிற்கு, 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி குழந்தைகள் நல அதிகாரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் ராகுல் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.