News June 26, 2024

புதுவை: மருத்துவமனைகளுக்கு அறிவிப்பு

image

புதுச்சேரியில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. இதில், 50% விபத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடைபெறுகின்றது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது புதுச்சேரி அரசு, “சாலை விபத்தில் சிக்குபவர்களின் ரத்தத்தில் மதுவின் அளவை மதிப்பீடு செய்ய வேண்டும்” என அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Similar News

News December 5, 2025

புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

image

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

News December 5, 2025

புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

image

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News December 5, 2025

புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

image

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) ‌புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!