News February 23, 2025
புதுவை போக்குவரத்து துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் பைக் டாக்சிக்கு உரிய அனுமதி பெறவில்லை. பொதுமக்கள் சொந்த வாகனத்தை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வணிக நோக்கத்திற்காக வாகனம் பயன்படுத்தும்போது அதற்கான வரி செலுத்தி பெர்மிட் பெற வேண்டும். மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.
Similar News
News February 23, 2025
புதுச்சேரி காகிதமில்லா சட்டப்பேரவையாக மாற்றம்

புதுச்சேரி மாநிலத்தில் காகிதமில்லா சட்டப்பேரவை பயிற்சி அரங்கத்தை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலையில் முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்.
News February 22, 2025
விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கிய புதுச்சேரி போக்சோ கோர்ட்டு

விழுப்புரம் மாவட்டம் கயத்தார் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன்(31) கடந்த 27.06.2019 அன்று திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிந்து புதுச்சேரி போக்சோ கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜானகிராமனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பெற்றோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
News February 21, 2025
புதுச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்க ஒப்புதல்

புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சதுக்கம் முதல் இந்திரா காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் சம்பந்தமாக மத்திய அமைச்சர் அவர்கள் புதுச்சேரி முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதம் எழுதி கோரிக்கை வைத்தார் அந்நிலையில் மத்திய அரசு மேம்பாலம் கட்டுவதற்கும் மற்றும் பாண்டியிலிருந்து கடலூர் வரை உள்ள 20கிமீ ரோட்டை அகலப்படுத்தவதற்கும் சேர்ந்து 1000 கோடி ரூபாய் செலவில் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.