News August 4, 2024
புதுவை ஜிப்மரில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி JIPMER-யில் Survey Field Data Collector பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://jipmer.edu.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் (ஆக.5) ஆகும். இதற்கு தகுதியான நபர்களுக்கு ரூ.45,000 வரை சம்பளம் பெறலாம்.கல்வித்தகுதி M.Sc, MA, Nursing தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News December 5, 2025
புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 5, 2025
புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


