News April 23, 2025
புதுவை: சிறுமி பாலியல் வன்கொடுமை-20 வருட சிறை

புதுச்சேரியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (25) என்பவருக்கும், வீடு கொடுத்து உதவிய அவரது நண்பர் கதிர்வேல் (29) என்பவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்க புதுச்சேரி அரசுக்கு, பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
புதுச்சேரி: தவெக பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு அனுமதி

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதையடுத்து புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் விஜய் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
News December 6, 2025
புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். <
News December 6, 2025
புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


