News October 9, 2025
புதுவை: சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தி, பொதுப்பணித்துறை ஊழியர்கள், உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் காவல்துறை உதவியுடன் அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 8, 2025
புதுவை: கார் மீது லாரி மோதி விபத்து

திண்டிவனத்தில் இருந்து, கடலூர் நோக்கி கார் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
News December 8, 2025
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய முதலவர்

தேக்வாண்டோ மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார். புதுச்சேரியில் தேக்வாண்டோ தற்காப்பு கலை பயிலும் மாணவர்கள், சட்டசபை அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்தனர். இந்த கலையில், மாநில அளவில் பிளாக் பெல்ட் எனும் நிலையை அடைந்த, நுாறு மாணவர்களுக்கு சான்றிதழை, முதல்வர் வழங்கினார்.
News December 8, 2025
புதுவை: தவெக கூட்டம் – அனுமதி கிடையாது

புதுச்சேரியில், நாளை டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி கொடுத்தனர். இந்த கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.


