News March 12, 2025

புதுவை காவல்துறைக்கு  ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு

image

இன்று நடந்த புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “புதுச்சேரி காவல்துறைக்கு 2025-26 நிதியாண்டில் ரூ. 401.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 வயதினைக் கடந்து திருமணம் ஆகாத, கணவரை இழந்த மற்றும் வேலையற்ற ஆதிதிராவிடர் பழங்குடியின மகளிருக்கு மாதம் ரூ. 3000 நிதி உதவி திருமணம், வேலைக்கு செல்லும் வரை வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.

Similar News

News April 21, 2025

புதுச்சேரி: அக்னி வீர் பணிக்கு சிறப்பு முகாம்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பொதுப்பணி, தொழில் நுட்பப்பணி, எழுத்தர், பண்டக காப்பாளர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 22.04.25 அன்று தாகூர் கலைக் கல்லூரியில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

News April 21, 2025

பூசாரி கொலை – கொத்தனார் கைது!

image

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்த‌தாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 20, 2025

செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

image

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்

error: Content is protected !!