News March 18, 2024
புதுவை: காரைக்காலில் துப்பாக்கிகள் வைத்திருக்க தடை

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காரைக்காலில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இதனால், துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றுள்ளவர்கள் உடனடியாக துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Similar News
News December 16, 2025
புதுவை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
புதுச்சேரி: திமுக நாடகம் – எம்பி செல்வகணபதி

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்று கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தீர்ப்பினை, அரசியல் ஆதாயம் தேடும் திமுக அரசு ஏற்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பது போல நடிப்பதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறது.
News December 16, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் எஸ்ஐஆர் திருத்தம் பற்றி பேட்டியில், SIRக்கு முன்பு 10,21,578 வாக்களர்கள், SIRக்கு பின்பு 9,18,111 வாக்களார்கள் உள்ளனர். 10% வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்கள் 20,798. 2% வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர் 80615 (8%), இரண்டு முறை பெயர் இடம் பெற்றவர்கள் 2,100, SIRக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் 1,03,467 என தெரிவித்துள்ளார்.


