News August 11, 2024
புதுவை: எஸ்எம்எஸ் அனுப்பி ரூ.2 லட்சம் மோசடி

புதுச்சேரி சாரம் பகுதியைச் சேர்ந்த வந்தனா என்பவரின் வாட்ஸ் அப்பில் வங்கியில் இருந்து போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் புதிதாக செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வந்தனா அந்த செயலியை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்த சிறிது நேரத்தில் ரூ.2 லட்சத்தை மோசடி கும்பல் எடுத்துள்ளது. இது குறித்து அவர் கோரிமேடு சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
Similar News
News December 13, 2025
புதுச்சேரி: அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சனிக்கிழமையான இன்று (டிச.13) இயங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சிவகாமி நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது பருவத் தேர்வும், +2 மாணவர்களுக்கு முதலாவது மாதிரி பொதுத் தேர்வும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வியாழக்கிழமை அட்டவணையின்படி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
News December 13, 2025
புதுச்சேரி: கொலை செய்த வாலிபர் கைது

புதுச்சேரியில் கள்ளத்தொடர்பு காரணமாக மாயமான பெண், அடித்து சாக்கு மூட்டையில் கட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற கள்ளத்தொடர்பில் வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த ஐயப்பன் என்ற வாலிபர், இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
News December 13, 2025
புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.


