News April 15, 2025
புதுவை: உதவியாளர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் உதவியாளர் பணியிடத்திற்கான முதல் நிலைத் தேர்வு ஏப்.27 ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம் பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. இத்தேர்வுக்கான அனுமதி சீட்டை தேர்வர்கள் http://recruitment.i-v.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நாளை 16ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
புதுவை: திருநள்ளாரில் பக்தர்களிடம் மோசடி-ஒருவர் கைது

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகார ஹோமம் செய்வதாக பக்தர்களிடம் மோசடி செய்ய முயன்ற போலி கைடு ஒருவரை திருநள்ளாறு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது திருநள்ளாறு பகுதியிலும், பக்தர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற போலி நபர்களிடம் பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருநள்ளாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.