News April 15, 2024
புதுவை: இளைஞருக்கு அதிகாலை ஏற்பட்ட கதி..!

முத்தியால்பேட்டை, காமராஜா் வீதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). இவா், நேற்று அதிகாலை பைக்கில் மிஷன் வீதி பகுதியில் சென்றாா். அப்போது கழிவுநீா் கால்வாய் கட்டும் பணி நடைபெறும் பகுதியில் பைக்குடன் தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
புதுவை சமூக செயல்பாட்டாளருக்கு புதுடெல்லியில் விருது

புதுடில்லியில் பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில், இன்று(12.12.2025) புரட்சியாளர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அதில் புதுவை மாநிலத்தின் ஏப்ரல்14 இயக்கத்தின் தலைவர் நா.நித்தியானந்தம் அவ்விருதினை பெற்றார். இவருக்கு புதுவையை சார்ந்த பல முற்போக்கு இயக்கங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
News December 12, 2025
புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரி டிஜிபி சாலிணி சிங் உத்தரவுபடி புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை 13ம் தேதி சனிக்கிழமை காவல் நிலையங்களில் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முதல் நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.
News December 12, 2025
புதுச்சேரி: டிச.31 ஆம் தேதி கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <


