News August 18, 2024
புதுவை ஆளுநர் அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் சூரிய மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க ஆளுநர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து அரசு அலுவலங்களிலும், சூரிய சக்தி மின் உற்பத்தியை தொடங்க ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயாரிக்கும் பணியை, மின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்தி விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 20, 2025
புதுச்சேரிக்கு பொது விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற அக்.21ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக நவ.15 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
News October 20, 2025
புதுவை: தொழிலாளி பரிதாப பலி

புதுச்சேரி, பாகூர் அடுத்துள்ள கரையாம்புத்துார் பேட்டை சேர்ந்தவர் சின்னத்தம்பி(56). கூலித்தொழிலாளி இவர் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அண்ணன் மகன் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டின் மாடி படிகட்டில் ஏறிய போது, சின்னத்தம்பி கால் தவறி கீழே விழுந்தார். இதில் நெற்றியில் அடிபட்ட அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 20, 2025
புதுவை: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

புதுச்சேரி மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். இதனை SHARE பண்ணுங்க