News April 27, 2025

புதுவை: அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு

image

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <>https://www.npcilcareers.co.in/<<>> என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் செய்யவும்

Similar News

News April 13, 2026

புதுச்சேரி: அடையாளம் தெரியாத நபர் இறப்பு

image

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் தற்போது அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2026

புதுச்சேரி: கெட்டவார்த்தை பேசிய இளைஞர் கைது

image

மங்கலம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி(34) என்பவர், குடி போதையில் மங்கலம் சிமென்ட் களம் பகுதியில் நின்றுக்கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து, ஆபாசமாக கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார். இதனையெடுத்து அங்கு போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

News April 12, 2026

புதுச்சேரி: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது.
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு செய்யலாம்.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

error: Content is protected !!