News April 27, 2025
புதுவை: அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <
Similar News
News November 27, 2025
மத்திய நிதி அமைச்சரை சந்தித்த புதுவை சபாநாயகர்

புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்தார். பின் புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட உள்ள ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு, விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு, இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார்.
News November 27, 2025
புதுவை: ரூ.650 கோடியில் சாலை மேம்பாலம் பணிகள்!

புதுவையில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம், சாலை விரிவாக்கத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், இந்திராகாந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை இடையே மேம்பாலம், இந்திராகாந்தி சிலையிலிருந்து அரியாங்குப்பம் வரை 2.6 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் மற்றும் அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை 13.4 கி.மீ. வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
News November 27, 2025
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து வடதமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நோக்கி நவ.29 மற்றும் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டது.


