News March 28, 2024
புதுவையில் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலையொட்டி நேற்று சாலையில் பறக்கும்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவையை மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.7 லட்சம் பணம் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
Similar News
News November 26, 2025
புதுச்சேரி: இலவச பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தொகுதி முருகேசன் நகரில், வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இலவச மனை பட்டா வழங்கிடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் சந்தித்து மனு அளித்தனர். புதுப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கின்ற வீடற்ற பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் Dr. சரத் சவுகான், இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அரசுச் செயலர் விக்ராந்த் ராஜா முகவுரையை தமிழில் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
News November 26, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுவதை ஒட்டி, புதுச்சேரி மாநில ஆளுநர் மாளிகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு, அரசியல் அமைப்பு தின உறுதி மொழியை வாசிக்க, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.


