News March 26, 2025
புதுவையில் முதலீட்டாளர்கள் மாநாடு – அமைச்சர் அறிவிப்பு

புதுவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் இந்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளும் LED விளக்குகளாக மாற்றப்படும். மின்துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார்.
Similar News
News January 5, 2026
வில்லியனுார்: மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

வில்லியனூர் பைபாஸ், பாரதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் தராததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 5, 2026
புதுச்சேரியில் மாணவர் ஆர்ப்பாட்டம்

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதாகவும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News January 5, 2026
புதுவை: குடிப்பழக்கத்தால் பறிபோன உயிர்!

புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் உஸ்மான்(42) தொழிலாளி. இவர் மனைவி ஷாஜகான் பேகம் இறந்ததால் குடிபழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்


