News March 26, 2025
புதுவையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் இன்று புதுச்சேரி வேலைவாய்ப்பகம் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தமிழகம் & புதுவையைச் சார்ந்த 10 நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000க்கும் மேல் பணியிடங்களை நிரப்ப உள்ளன. SSLC, HSC, ITI, DIPLOMA, ANY Degree என அனைவரும் பங்கு பெறலாம். நண்பர்கள் பயன் பெற SHARE செய்யவும்..
Similar News
News November 8, 2025
புதுவை: முன்விரோதத்தில் தந்தை-மகன் மீது தாக்குதல்

புதுவை அரியாங்குப்பம் நோணாங்குப்பம் பகுதி பூபாலன். இவர் ஓய்வு பெற்ற அரசுத்துறை டிரைவர். அவருக்கும், அதே பகுதி நடராஜன், முருகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் 2 பேரும் சேர்ந்து பூபாலனை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது மகன் ஸ்ரீராம் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 8, 2025
புதுவை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுவை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
புதுவை: 17 போலீஸ்சார் இடமாற்றம்

புதுச்சேரி காவல்துறை தலைமையக எஸ்.பி. மோகன்குமார் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் காவல் துறையில் 3 சப் இன்ஸ்பெக்டர் உட்பட 17 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சப் இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் கிழக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்து சிக்மா செக்யூரிட்டி பிரிவுக்கும், சிவசுப்ரமணியன் வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் இருந்து வன்கொடுமை தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்


