News August 9, 2024

புதுவையில் சாராய பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் – முதல்வர்

image

புதுச்சேரியில் 1989ல் மதுபான கடைகளுக்கு அனுமதி தரப்பட்டது. அதன்பின் இதுவரை புதிதாக அனுமதி தரப்படவில்லை. புதுவை அரசின் சாராய ஆலை மூலமே சாராயம் வழங்குகிறோம். சாராயம் தொடர்பான புகார்களால், இனி சாராய பாக்கெட் & பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி  இன்று சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.

Similar News

News November 21, 2025

புதுவை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் இழப்பு!

image

புதுவை பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த மஞ்சினி என்பவர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை இணையத்தில் தேடி வந்தார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த லிங்க் மூலம் ரூ.30 லட்சம் வரை பணம் செலுத்தி ஆன்லைனில் சூதாடியுள்ளார். ஆனால் இதன்மூலம் கிடைத்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முடியவில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசில் இது குறித்து புகார் அளித்தார்.

News November 21, 2025

புதுவை வீரர்கள் ஆசிய போட்டியில் பங்கேற்பு!

image

ஆசிய அளவிலான டாட்ஜ்பால் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில், வருகிற 23ஆம் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது. அதில் பங்கேற்க இந்திய அணி மலேசியா சென்று உள்ளது. இந்திய அணியில் புதுச்சேரி பாகூரை சேர்ந்த தர்ஷன், பத்மநாபன், தனிஷ்கா, விஜேஷ்வரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வீரர்களை புதுச்சேரி முதலமைச்சர், பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் நேற்று வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

News November 21, 2025

புதுச்சேரி: கைவினை கண்காட்சி துவக்க விழா

image

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினை விற்பனை மையம் மற்றும் கண்காட்சி துவக்க விழா, புதுச்சேரி வர்த்தக சபை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீனியர் எஸ்பி கலைவாணன் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 10க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்களின் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!