News December 6, 2024
புதுவையில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும்

ஃபெஞ்சல் புயல் மற்றும் தொடர் கன மழையால், கடந்த 27, 28 மற்றும் 29ம் தேதி ஆகிய 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த வேலை நாட்களை ஈடு செய்யும் வகையில், வரும் 7ஆம் தேதி (புதன்கிழமை பாடத்திட்டம்), 14ஆம் தேதி (வியாழக்கிழமை பாடத்திட்டம்) 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் இயங்கும். 21ஆம் தேதி சனிக்கிழமை செய்முறை தேர்வு 3 நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி தெரிவித்தார்.
Similar News
News January 3, 2026
புதுவை: போலீஸ் உடல் தகுதி தேர்வு-66 பேர் தேர்வு!

புதுச்சேரியில் போலீஸ் பணிக்கான உடல் தகுதித் தேர்வு கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று 500 பேர் அழைக்கப்பட்டதில், 279 பேர் மட்டுமே பங்கேற்றனர். 221 பேர் ஆப்சென்ட் ஆகினர். மேலும் நேற்று நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகளில் 279 பேரில், 66 பேர் மட்டுமே அடுத்த மாதம் நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
News January 3, 2026
புதுச்சேரியில் வாகன பேன்சி எண்கள் ஏலம்

புதுவை போக்குவரத்துத் துறை ஆணையரின் செய்திக் குறிப்பில், “புதுவை போக்குவரத்துத் துறையின் PY 02 Z (காரைக்கால்) வரிசையில் உள்ள பேன்சி எண்களை https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 4:30 வரை ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கு பெற https://parivahan.gov.in/fancy இணையதளத்தில் வரும் 5-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 3, 2026
புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!


