News May 12, 2024
புதுவையில் கொலை மிரட்டல் – 3 பேருக்கு வீச்சு

புதுவை முத்தரையர்பாளையம் முத்துகுமரன் . இவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்விரோதம் இருந்து வந்தது. அவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு முத்துகுமரன் வீட்டு வாசலில் நின்ற அவரது பைக்கை, கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். தட்டி கேட்ட முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்
Similar News
News April 21, 2025
காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடிநாதர்

தரங்கம்பாடி அருகே கீழையூர் கடைமுடிநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிவனின் சாபம் பெற்ற பிரம்மா இங்குள்ள சிவபெருமானை வேண்டி மன்னிப்பு கேட்டதாக தல வரலாறு கூறுகின்றது. ஆகையால் இங்கு மனமுருகி மன்னிப்பு கோரினால் நாம் செய்த தவறுகளுக்கு சாபவிமோஷனம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வழிபட்டால் காசி சென்ற புண்ணியம் கிடைக்கும். ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
புதுச்சேரி: 10th போதும், ரூ.18,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 21, 2025
புதுச்சேரி மின்சாரத் துறையில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி மின்சாரத் துறை கட்டுமான உதவியாளர் பணி நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இதற்கு 25 ஏப்ரல் 2025 பிற்பகல் 3 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், விருப்பமுடைய 18 முதல் 25 வயது வரை உள்ள தகுதிவாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ <