News March 30, 2025
புதுவையில் காவலர்கள் திடீர் மாற்றம்

புதுவை காவல் தலைமையகத்தின் எஸ்.பி சுபம் கோஷ் வெளியிட்ட அறிவிப்பில், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி சிக்மா நுண்ணறிவு பிரிவிற்கும், வரதராஜன் போதை பொருட்கள் தடுப்பு பிரிவிற்கும், செந்தில்குமார் சிக்மா செக்யூரிட்டி, ஆடலரசன் ஏனாம் காவல் நிலையம், அனில்குமார் மாஹே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர்கள் குமரவேல் ஒதியஞ்சாலை, பிரபு பாகூர் காவல் நிலையத்திற்கும் என இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 5, 2025
புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Associate-I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாகவும், 22.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க…
News April 5, 2025
ஓசியில் சிகரெட் – வியாபாரியை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

புதுச்சேரி அடுத்த கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஹரிஷ், ஜிப்மர் மருத்துவமனை எதிரே டீ கடை வைத்துள்ளார். திலாஸ்பேட்டையைச் சேர்ந்த சசிக்குமார், குருமாம்பேட்டை கிருஷ்ணராஜ் ஆகியோர் மதுபோதையில் ஹரிஷ் கடைக்கு சென்று ஓசியில் சிகரெட் கேட்டுள்ளனர். ஹரிஷ் பணம் இல்லாது கொடுக்க முடியாது என கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் வெட்டியுள்ளனர். இந்நிலையில், போலீசார் நேற்று இருவரையும் கைது செய்துள்ளனர்.
News April 4, 2025
அக்னிவீர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு புதுச்சேரி மாவட்டம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.