News August 9, 2024
புதுவையில் ஐகோர்ட் உத்தரவை மீறி பேனர்

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி பிறந்தநாளை ஒட்டி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனர்கள், கட் அவுட்கள் ஐகோர்ட் உத்தரவை மீறி வைக்கப்பட்டுள்ளன. எனவே நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற வழிகாட்டுகளை கடைபிடிக்காத அதிகாரிகள்மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 24, 2025
புதுச்சேரி: தேசிய புத்தக கண்காட்சி அறிவிப்பு!

புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்க நிர்வாகிகள் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், 29வது தேசிய புத்தக கண்காட்சி வள்ளலார் சாலையில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில், அடுத்த மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. கண்காட்சியில் புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மும்பை, டில்லி முதலான பகுதிகளிலிருந்து 100 புத்தக வெளியீட்டாளர்கள் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
News November 24, 2025
புதுச்சேரி: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.24) கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 24, 2025
புதுச்சேரி முதல்மைச்சர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,, பார்வையற்றோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நேபாள அணியை வீழ்த்தி, இந்திய அணி அபார வெற்றி பெற்றிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது. இன்னும் பல புகழ்பெற்ற தருணங்கள் வரவும், தொடர்ந்து வரலாற்றைப் படைத்துக்கொண்டே இருக்கவும், இந்திய அணிக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


