News March 28, 2024

புதுவையில் எச்சரிக்கை

image

புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக் குறிப்பில்:- தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து அழைத்து சிபிஐ அதிகாரி என்றும் உங்களுடைய பெயரில் வந்துள்ள பார்சலில் போதை பொருட்கள் உள்ளது என்றும் உங்களை கைது செய்யாமல் இருக்க ரூ.10 லட்சம் வரை பணத்தை செலுத்த வேண்டும் என்று மிரட்டுவார்கள். இது முற்றிலும் மிரட்டி பணம் பறிக்கும் குற்றவாளியின் செயல் எனவும் போலீசில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News

News December 2, 2025

புதுச்சேரி: படகு சவாரி மீண்டும் திறப்பு!

image

புயல் எச்சரிக்கை அறிவிப்பை அடுத்து, புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 3 நாட்களாக படகுகள் இயக்காமல் இருந்தன. இந்நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சிற்கு நேற்று படகுகள் இயக்கப்பட்டன. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.

News December 2, 2025

புதுச்சேரி: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

image

புதுச்சேரி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த ஆதார் <>செயலியை <<>>பதிவிறக்கம் செய்து பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் செய்து கொள்ளலாம். குடும்பத்தினரின் ஆதார் மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த செயலி இருந்தா ஆதார் கைல வச்சுக்க வேண்டிய அவசியமில்லை. SHARE பண்ணுங்க!

News December 2, 2025

புதுச்சேரி: மழையால் இடிந்து விழுந்த பள்ளி சுவர்

image

புதுச்சேரி அரியாங்குப்பம் புறவழிச்சாலை, சிக்னல் அருகில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. டிட்வா புயலால் பெய்த மழையால், நேற்று சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின், 10 அடி உயர மதில் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, சுவர் பக்க த்தில் இருந்த, ஜூஸ், டிபன், சிக்கன் கடைகள் உட்பட 5 சாலையோர கடைகள் மீது சுவர் விழுந்ததில் கடைகள் முற்றிலும் சேதமடைந்தன.

error: Content is protected !!