News August 3, 2024
புதுவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு புதுவை மாநிலத்தில் பள்ளிகளுக்கு இன்று (ஆக.3) விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுவை, காரைக்கால் ஏனாம், மாகே அனைத்து பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி பணிபுரிந்த ஆசிரியர்கள் நிகழாண்டில் எந்த நாளில் வேண்டும் என்றாலும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
Similar News
News December 5, 2025
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 5, 2025
புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
புதுவை: திருநள்ளாரில் பக்தர்களிடம் மோசடி-ஒருவர் கைது

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகார ஹோமம் செய்வதாக பக்தர்களிடம் மோசடி செய்ய முயன்ற போலி கைடு ஒருவரை திருநள்ளாறு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது திருநள்ளாறு பகுதியிலும், பக்தர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற போலி நபர்களிடம் பக்தர்கள் ஏமாற வேண்டாம் என திருநள்ளாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


