News October 25, 2024
புதுவையில் இன்று கடைசி நாள்

புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாவது கட்ட சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்று மாலைக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 27, 2025
புதுவை: போலி மாத்திரை தயாரித்த தொழிற்சாலை

புதுவை, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் போலி மருந்து தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, CBCID இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள மருந்துகள் போலியானவை என தெரியவந்ததால் போலீஸ் டிஐஜி எஸ்பி-க்கள் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் இன்று மின்தடை அறிவிப்பு

புதுவை தொண்டமாநத்தம் வில்லியனூர் மின்பாதையில் இன்று(நவ.27) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பத்துக்கண்ணு, கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம், உளவாய்க்கால், சேந்தநத்தம்பேட்டை, வள்ளுவன்பேட்டை மற்றும் உயர் மின்அழுத்த தொழிற்சாலைகள், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுமென புதுவை மின்துறை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.