News August 25, 2024
புதுவையில் ஆணழகன் போட்டி

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் 55 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருபுவனை உடற்பயிற்சியாளர் சிவனேசன் ஏற்பாட்டில் சவுத் இந்தியன் அளவில் ஆணழகன் போட்டி கடற்கரை சாலையில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அமைச்சர் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 26, 2025
தவெக நிர்வாகிகள் புதுச்சேரி முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5ம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் ரோடு ஷோவிற்கு அனுமதி கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சட்டசபையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் முதல்வர் அவர்களிடம் மனு கொடுத்தனர்.
News November 26, 2025
புதுச்சேரி: தவெகவில் இணையும் முன்னாள் பாஜக தலைவர்

புதுச்சேரி, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சுவாமிநாதன் எம்எல்ஏ மற்றும் காரைக்கால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா ஆகியோர், நாளை காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் இணைகின்றனர். மேலும் பலர் அடுத்தடுத்து தவெகாவில் சேர உள்ளதாகவும் தகவல்.
News November 26, 2025
புதுச்சேரி: இலவச பட்டா வழங்க ஆட்சியரிடம் மனு

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தொகுதி முருகேசன் நகரில், வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது இலவச மனை பட்டா வழங்கிடக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் சந்தித்து மனு அளித்தனர். புதுப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக வசிக்கின்ற வீடற்ற பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


