News October 23, 2024
புதுமைப் பெண் திட்டத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம்

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் ‘புதுமைப் பெண்’ திட்டம் மூலமாக கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை பெறுவதில் 2ஆவது இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News November 26, 2025
திருச்செங்கோடு அருகே விபத்தில் தொழிலாளி பலி!

சேலம் மாவட்டம் சின்னனூர் வண்ணார்தெரு பகுதியைச் சேர்ந்த நடராஜன் (55), முடிதிருத்தும் தொழிலாளி. நேற்று திருச்செங்கோடு ஆன்றாபட்டி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, எதிர் பக்கமாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி பலியானார். அதே மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்றாபட்டியை சேர்ந்த செல்வராஜ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தினர்.
News November 26, 2025
நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (26-11-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ.94, முட்டை கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.133- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.10- ஆக நீடிக்கின்றது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை, கடந்த 5 நாட்களாக அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் நீடிக்கின்றது.


