News June 26, 2024

புதுமைப் பெண் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் புதுமைப்பெண் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இதில் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவிகளும் பயனடையலாம். இதில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரி சிறப்பு அலுவலர் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவ-28) “உனது பாதுகாப்பு உன் கையில் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவதை மறவாதீர்…! என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.

News November 28, 2025

திருப்பத்தூர்: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <>இணையதளம்<<>> மூலமாகவோ அணுகி புகார் அளியுங்கள். செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ நேரில் சென்றும் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News November 28, 2025

திருப்பத்தூர்: AIRPORT-ல் வேலை! APPLY NOW

image

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 -ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!