News December 31, 2024
புதுமைப்பெண் திட்டத்தில் 9,340 மாணவிகளுக்கு நிதி

தமிழ்நாடு முழுவதும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தொடங்கி வைத்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து 62 கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயிலும் 9,340 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
Similar News
News November 27, 2025
கிருஷ்ணகிரியில்: 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடியாக கொள்முதல் செய்ய முதற்கட்டமாக, குப்பச்சிப்பாறை, மதக்கொண்டப்பள்ளி, சாமனப்பள்ளி, பாகலூர் மற்றும் பேரிகை ஆகிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடங்களில் நாளை (நவ.28) 5 இடங்களில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் தெரிவித்தார்.
News November 27, 2025
கிருஷ்ணகிரி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை!

ஓசூரில் செயின் பரிப்பில் ஈடுபட்டு வந்த குமார் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சிப்காட் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று (26.11.25) ஓசூர் நீதிமன்ற நீதிபதி ஜெய் மணி தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் முடிவில் குமாருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பார்த்துக்கொள்ள கூறினார்.
News November 27, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (26.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


