News January 22, 2025
‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 8,087 பேர் பயன்!

தமிழ்நாடு அரசு, சமூக நலத்துறை மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த 2023- 24-ம் ஆண்டில் ‘புதுமைப்பெண்’ திட்டம் மூலம் 8 ஆயிரத்து 87 பேர் பயன்பெற்றுள்ளனர். திருமண நிதியுதவி திட்டத்தில் 1,204 பேர் பயனடைந்துள்ளதாக சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!

மருமகளிடம் அத்து மீறி நடந்ததாக மாமனார் கைது!சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி பகுதியில் மருமகளிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறி டார்ச்சர் செய்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த வழக்கில் பெண்ணின் மாமனார் காசி (55) என்பவரை சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
News November 28, 2025
திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது!

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையம் ஒன்றியம் கல்வராயன் மலை, கிராங்காடு திமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் கடந்த 22ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அவரது உறவினர் ராஜமாணிக்கம், ஜெயக்கொடி, பழனிசாமி மற்றும் குழந்தைவேல் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 28, 2025
சேலம்: திமுக நிர்வாகி கொலை சம்பவம்: 4 பேர் கைது

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கடந்த வாரம் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில், அவருடைய உறவினர்கள் நான்கு பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். நிலப் பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை செய்தேன் என்று கூறியதை அடுத்து நான்கு பேர் மீது கருமந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


