News June 27, 2024
புதுப்பொலிவு பெறும் வரலாற்று சின்னங்கள்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கையின் போது, 310 ஆண்டுகள் பழைமை வாய்ந்த, ராணிப்பேட்டையின் வரலாற்று அடையாளமாக திகழும் பாலாறு நதிக்கரையில் அமைத்துள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூபாய் 2.5 கோடியில் புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News January 9, 2026
போரில் பூத்த ராணிப்பேட்டை!

தமிழ்நாட்டில் வேலூரில் இருந்து மாவட்டங்களில் ஒன்றான ராணிப்பேட்டையின் பெயருக்கு பின்னால் ஒரு சுவாரசியம் உள்ளது.ஆற்காடு நவாப் செஞ்சி மீது படையெடுத்த போது வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்கு மற்றும் அவருக்காக உடன்கட்டை ஏறிய ராணிபாய்க்காக பாலாற்றின் வடக்கு பகுதியில் புதிய நகரை உருவாக்கி அதற்கு ‘ராணிப்பேட்டை ‘ என பெயரிட்டார்.போரில் பூத்த ராணிப்பேட்டை வரலாற்றை ஷேர் பண்ணுங்க..
News January 9, 2026
ராணிப்பேட்டை: பள்ளத்தில் கவிழ்ந்த ஆட்டோ; 7 பேர் நிலை?

அரக்கோணம் அருகே போலிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜன.8) பயணிகளை ஏற்ற நின்றிருந்த ஆட்டோ மீது கட்டுப்பாட்டை இழந்த கிரேன் மோதியது. இதனால் ஆட்டோ அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 7 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 9, 2026
ராணிப்பேட்டை: அதிரவைத்த புகார்… போக்சோவில் கைது

ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் கிராமம் கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர்.


