News April 23, 2025
புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை 30 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அழகுமீனா அதில் கேட்டுக்கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News November 19, 2025
குமரி – பெங்களூரு வந்தே பாரத் ரயில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை வருகிற ஜனவரி மாதம் தொடங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இது சென்னை மற்றும் பெங்களூருக்கு ஒரே நேரத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பயன் அளிக்கும் என்றும், 16 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இது குமரி மாவட்ட ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
News November 19, 2025
கன்னியாகுமரி: எங்கெல்லாம் மின்தடை? முன்பே அறியலாம்!

குமரி முழுவதும் எளிதாக மின்தடை எப்போதெல்லாம் ஏற்படும் என்பதை ஆன்லைன் மூலமாக நீங்களே வீட்டில் இருந்தபடி தெரிந்து கொள்ளலாம். மின்வாரியம் இதற்கான வசதியை செய்து தந்துள்ளது. இந்த <
News November 19, 2025
குமரி: முடி உதிர்வு காரணமாக பெண் எடுத்த முடிவு

தென்தாமரை குளம் கீழச்சாலை ஐஸ்வர்யா(27) பட்டதாரி. இவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலை முடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததால், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். “தான் உயிரோடு இருப்பதை விட சாவது மேல்” என அடிக்கடி புலம்பி உள்ளார். நவ.17-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது ஐஸ்வர்யா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


