News August 16, 2024
புதுடெல்லியில் புதுவை சுதந்திர தினம்

புதுவை சுதந்திர தின கொண்டாட்டத்தை இன்று புது டெல்லியில் உள்ள புதுவை சுற்றுலா விருந்தினர் மாளிகையில் புதுவை சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றன. நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
புதுச்சேரி: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (18/11/25) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: சீற்றத்துடன் கரையில் மோதும் அலை!

புதுச்சேரியில் கடல் அலை சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மழை இன்றி வானம் கரு மேகமூட்டமுடன் காணப்பட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.