News August 9, 2024

புதுச்சேரி: 62 பவுன் தங்கம் கொள்ளை; 7 பேர் கைது

image

காரைக்காலை அடுத்த அம்பகரத்தூரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கனகவள்ளி ஜூலை 22-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் கனகவள்ளியை தாக்கி 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சிறுவன் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Similar News

News November 26, 2025

புதுச்சேரி: ஆணையர் எச்சரிக்கை

image

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஜ்ராஜ் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், மாடுகள் வளர்ப்போர் தங்களது மாடுகளை சாலைகள் மற்றும் பொது இடங்களில் திரிய விட கூடாது. சுகாதாரமான முறையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டுமே வளர்க்க வேண்டும். லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் பொதுமக்களுக்கு இடையூராக கால்நடைகளை திரிய விட கூடாது. தவறினால் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர்.

News November 26, 2025

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்?

image

புதுச்சேரி தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் இன்று கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் டிஜிபியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், புதுச்சேரியில் டிச.5ஆம் தேதி பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டனர். மேலும் காலாப்பட்டு முதல் உப்பளம் வரை பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

News November 26, 2025

புதுவை: லோன் பெற்று தருவதாக பணம் மோசடி – இளைஞர்கள் கைது

image

புதுவை, கொடாத்துாரைச் சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். அதனை நம்பி அவர் தன்னுடைய வங்கி விவரங்களை வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபருக்கு அனுப்பியுள்ளார். பின், மர்மநபர் ரூ.54 ஆயிரம் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தால் தான் லோன் பெறமுடியும் என கூறவே அவர் பணத்தை அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்த புகாரின்படி சென்னையைச் சேர்ந்த வாலிபர்களை நேற்று போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!