News April 10, 2025

புதுச்சேரி: 3 மாதத்தில் 24 பேர் வாகன விபத்தில் உயிரிழப்பு

image

புதுவையில் ஆண்டுதோறும் வாகன எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப வாகன விபத்துகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 123 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் இந்தாண்டு கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகளில் 2 சிறுவர்கள் உள்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே போலீசார் அறிவுரையின் படி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டவும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த SHARE செய்யவும்.

Similar News

News December 12, 2025

புதுவை: மருத்துவக் கல்லூரியில் சேர அவகாசம்

image

புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று இட ஒதுக்கீடு பட்டியலை சென்டாக் வெளியிட்டது. அதன்படி 283 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கால அவகாசம் தற்போது 13-ம் தேதி மாலை 5மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

image

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!