News January 2, 2025
புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் சுங்கக் கட்டணம்
விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே 186 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.முதல் விழுப்புரம் – புதுச்சேரி வரை 29 கி.மீ. தொலைவுக்கு நான்குவழிச் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, தற்காலிகப் பயன்பாட்டில் உள்ளது இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு ஜன.3- ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது
Similar News
News January 8, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ் பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் செல்போன் சர்வீஸ் செய்யும் பொழுது பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை மற்றவர்கள் திருடும் வாய்ப்பு இருப்பதால்இது போன்ற புகைப்படங்களை செல்போனில் சேமித்து வைக்க வேண்டும் இது போன்ற தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி இல்லாமல் உபயோகப்படுத்தினால் வழக்கு பதிவு சிறையில் அடைக்கப்படுவர்
News January 7, 2025
முழு நிலை மருத்துவ படிப்பில் கட் ஆப் மதிப்பெண் குறைப்பு
புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது 2கட்ட கலந்தாய்வு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி நீட் கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட்டு உள்ளது.
News January 7, 2025
புதுவை: அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.