News November 10, 2024
புதுச்சேரி வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

புதுச்சேரி வனத்துறை அலுவலகம் கட்டிடத்தின் அருகே பெரியார் நகருக்கு செல்லும் சாலையில் வாய்க்காலில் இன்று 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தான் பேரில் போலீசார் அங்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
புதுவை: தவெக கூட்டம் – அனுமதி கிடையாது

புதுச்சேரியில், நாளை டிச.9ம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை அனுமதி கொடுத்தனர். இந்த கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்திருந்த நிலையில், தவெக பரப்புரை கூட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. மாதச்சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6.கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
புதுவை: காதலி இறந்த சோகத்தில் தற்கொலை

புதுவை தவளக்குப்பம் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் ஜெயகாந்த், டிரைவர். இவர் உறவினர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அப்பெண் குடும்ப பிரச்சனையில் இறந்தார். இதையடுத்து அதிலிருந்து, ஜெயகாந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்களிடமும் நண்பர்களிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


