News April 30, 2024

புதுச்சேரி மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

image

புதுச்சேரி கடற்பகுதியில் நெகிழி போத்தல்கள் மற்றும் மணல் மூட்டை கட்டி அதில் சவுக்கை போன்ற மரங்களின் கிளைகளை கொண்டு கடல் பகுதியில் இறக்கிவிட்டு அதன் மீது ஹூக்கான் (எ) அக்டி முறையில் சில மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறையில் மீன்பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி அரசின் மீன்வளத்துறை சார்பில் வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News April 20, 2025

புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

image

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்

News April 20, 2025

இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 20, 2025

புதுவை: வாய்க்காலில் ஆண் சடலம் மீட்பு

image

வில்லியனூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுந்தரராஜன். இவர், குடிப்பழக்கம் உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நேற்று காலை அதே பகுதி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் சடலத்தை மீட்டு, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!