News April 25, 2025
புதுச்சேரி மக்கள் அறிந்திருக்க வேண்டிய எண்கள்

புதுச்சேரி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு உதவி எண்கள். குடிமக்கள் குறை தீர் மையம் – 1077, குற்றங்கள் தடுப்பு – 1090, மீட்பு மற்றும் நிவாரண உதவி – 1070, பெண்கள் உதவி எண் – 1091, குழந்தைகள் உதவி எண் – 1098, சாலை விபத்து – அவசர உதவி – 1073, அவசர ஊர்தி – 102 மற்றும் 108, தீயணைப்பு உதவி – 101, காவல் கட்டுப்பாட்டு அறை – 100. இந்த எண்களை SHARE செய்து பிறருக்கும் தெரியப்படுத்தவும்.
Similar News
News November 11, 2025
புதுச்சேரி: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News November 11, 2025
புதுவை: கண்களை தானமாக வழங்கிய குடும்பம்

புதுவை, வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (98). இவர், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது குடும்பத்தினர் முன்வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளை சேர்மனை தொடர்பு கொண்டுள்ளனர். அவர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், அங்கு வந்த கண் மருத்துவ குழுவினர் ஜெயலட்சுமி கண்களை தானமாக பெற்றுச் சென்றனர்.
News November 11, 2025
புதுவை: மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்!

புதுச்சேரி, உப்பளம் சோனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மா, இவரது மனைவி தமிழ்செல்வி, தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடற்கரை காந்தி சிலை அருகில் பொம்மை கடை நடத்தி வரும் தமிழ் செல்வியை, குடிபோதையில் வந்த தர்மா, கடையில் இருந்த மனைவி தமிழ் செல்வியை ஆபாசமாக பேசி, உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இந்த புகாரின் படி, பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.


