News December 30, 2024
புதுச்சேரி போலீசார் அதிரடி நடவடிக்கை: 48 பேர் மீது வழக்கு
புதுச்சேரி டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி., கலைவாணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் இணைந்து புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில் ஆபரேஷன் திரிசூல் சோதனை மேற்கொண்டனர். முன்னிட்டு, மக்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய 48 பேர் மீது முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Similar News
News January 6, 2025
அரசுக்கு மரியாதை கொடுக்க தவறிவிட்டார்: நாராயணசாமி
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தமிழக கவர்னர் திட்டமிட்டு வெளிநடப்பு செய்து ஜனநாயக படுகொலை செய்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மரியாதையை கொடுக்க தவறிவிட்டார். இதனால் ஜனாதிபதி கவர்னர் பதவியிலிருந்து ரவியை நீக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய கவர்னரை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News January 6, 2025
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது இந்த நிலையில்
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டார் புதுச்சேரியில் மொத்தம் 845885 வாக்காளர்கள் உள்ளனர்
News January 6, 2025
ஏனாம் சென்றடைந்த புதுச்சேரி அமைச்சர்கள்
புதுச்சேரி மாநில ஏனாமில் 23 வது மலர் கண்காட்சி இன்று ஜி எம் சி பாலயோகி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் அரசு கொறடா ஆறுமுகம் எம் எல் ஏக்கள் பாஸ்கர் லட்சுமி காந்தன் ஆகியோர் ஏனாம் சென்றடைந்தனர். புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநித மல்லாடி கிருஷ்ணாராவ் வரவேற்றார்.