News April 28, 2025

புதுச்சேரி: பெயிண்டருக்கு கத்தி வெட்டு

image

உறுவையாறு பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கிருஷ்ணகாந்த்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(24) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மாலை உறுவையாறு ஏரிக்கரை பகுதியில் கிருஷ்ணகாந்த்தை சந்தோஷ், அவரது நண்பர் முருகன் ஆகியோர் கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

புதுச்சேரி: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

image

புதுச்சேரி, தவளகுப்பத்தை அடுத்த தானம்பாளையம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை, சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பெரியமதகு திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி விஷ்வா, இன்ஸ்டாகிராம் மூலம் அந்தச் சிறுமியுடன் பழகியுள்ளாா். பின்னர் அந்த சிறுமியை அவர் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் அளித்த புகார் படி தவளக்குப்பம் போலீசார் விஷ்வாவை, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News November 24, 2025

BREAKING புதுச்சேரிக்கு இன்று விடுமுறை

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் நவ. 26ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

புதுச்சேரி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

புதுச்சேரி மக்களே உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் செய்து<<>> மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!