News March 18, 2025
புதுச்சேரி: பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் – முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்து வருகின்றன. புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம்.தமிழ் நமது உணர்வு. நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், என உத்தரவிட்டார்.
Similar News
News March 19, 2025
திருமண வரம் தரும் சாரம் சுப்பிரமணியர் ஆலயம்

புதுச்சேரியில் சஷ்டி விழாவிற்கும், சூர சம்ஹாரத்திற்கும் புகழ்மிக்க கோயில் தான் இந்த சாரம் சுப்பிரமணியர் கோயில். இக்கோயில் சிறப்பே பழங்காலத்து பூங்குளமும், பூந்தோட்டமும் தான். இங்கு முருகன் தன்னை நாடி வருபவர்களின் குறையை தீர்ப்பார். மேலும் சஷ்டி விரதம் இருந்து வழிபடுவோருக்கு திருமணத் தடை, மகப்பேறு போன்ற குறைகள் தீரும் என இங்கு வரும் பக்தர்களே உறுதி செய்கின்றனர். முருக பக்தர்களுக்கு SHARE செய்யவும்
News March 19, 2025
இந்திய கடற்படையில் 327 காலிப்பணியிடங்கள்

இந்திய கடற்படையில் 327 குரூப் C பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் லஸ்கர்களின் சிராங் – 57, லஸ்கார்- I – 192, தீயணைப்பாளர் – 73, டோப்பஸ் – 5 என நிரப்பபடவுள்ளது. இதற்கான மாத ஊதியம் ரூ. 25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 1. இதுகுறித்து மேலும் அறிய <
News March 19, 2025
புதுச்சேரியில் ரூ.1000 கோடியில் புதிய திட்டம்

நேற்று சட்டசபையில் கடல் அரிப்பால் மீனவ கிராமங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு புதுச்சேரியில் 24 கி.மீ., துாரம் உள்ள கடலோர பகுதிகளை பாதுகாக்க இ-ஷோர் திட்டத்தின்கீழ் ரூ. 1,000 கோடியில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சேர்த்து தான் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது என அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.