News April 14, 2024

புதுச்சேரி: நாளை மல்லிகார்ஜுன கார்கே கார்கே வருகை

image

இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து நாளை மாபெரும் பொதுக்கூட்டம் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News

News November 16, 2025

புதுச்சேரி: ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வாய்ப்பு!

image

மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிறுவனத்தில் காலியாக உள்ள 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-12-2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 16, 2025

வில்லியனூர் அதிக குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி சாவு

image

புதுவை வில்லியனூரை சேர்ந்தவர் சதீஷ்( 38)
பெயிண்டர். இவர் தந்தை சேகர் (64)கூலி தொழிலாளி. இவரது குடி பழக்கத்தால் இவருக்கு ரத்த அழுத்தம்,
சர்க்கரை நோய்
இருந்தது. இவர் சில நாட்களாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வராமல்
இருந்துள்ளார். இதனிடையே
தனியார் வணிக வளாகத்தில் சேகர்
இறந்து கிடப்பதாக சதீஷூக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

லாஸ்பேட் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்தவர் கைது

image

புதுவை லாஸ்ட்பேட் கருவடிக்குப்பம் பகுதியில் மர்மநபர் ஒருவர் மது போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (37) என்பது தெரியவந்தது இதையடுத்து அவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் செய்தனர்.

error: Content is protected !!