News April 14, 2024
புதுச்சேரி: துறவறம் ஏற்ற 13 வயது சிறுவன்

புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் விகாஷ் சம்தர்யா, பிரியங்கா சம்தர்யா தம்பதியின் இளைய மகன் ஹார்திக் (13) துறவறம் மேற்கொள்ள முன்வந்துள்ளார். இதனை அந்த குடும்பத்தினர் ஏற்றனர். அதையடுத்து புதுவை சித்தன்குடியில் உள்ள ஜெயின் கோயிலில் இருந்து ஆன்மிக ஊர்வலம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வை அடுத்து அகமதாபாத் புறப்பட்டு சென்று வரும் 28-ல் ஹார்திக்கு தீட்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
Similar News
News December 16, 2025
புதுவை: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
புதுச்சேரி: திமுக நாடகம் – எம்பி செல்வகணபதி

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற கூடாது என்று கூறிவருகிறது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தீர்ப்பினை, அரசியல் ஆதாயம் தேடும் திமுக அரசு ஏற்கவில்லை. இஸ்லாமியர்களுக்கு துணையாக இருப்பது போல நடிப்பதற்காக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகிறது.
News December 16, 2025
புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் எஸ்ஐஆர் திருத்தம் பற்றி பேட்டியில், SIRக்கு முன்பு 10,21,578 வாக்களர்கள், SIRக்கு பின்பு 9,18,111 வாக்களார்கள் உள்ளனர். 10% வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்கள் 20,798. 2% வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர் 80615 (8%), இரண்டு முறை பெயர் இடம் பெற்றவர்கள் 2,100, SIRக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் 1,03,467 என தெரிவித்துள்ளார்.


