News April 10, 2025
புதுச்சேரி டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் எச்சரிக்கை

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று (ஏ.09) இரவு செய்தியாளர்களை சந்தித்த டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், “வேலைவாய்ப்பு, கடனுதவி, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் அரஸ்ட் என மர்ம கும்பல் பேசி மோசடி செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார். இதை பிறருக்கும் SHARE செய்யுங்க
Similar News
News November 18, 2025
புதுவை: படகு இயக்கிய தனியார் நிறுவனம் மீது வழக்கு

பழைய துறைமுகம் பகுதியில் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு செல்வதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் விசாரித்ததில், படகு மூலம், 62 சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. வானிலை எச்சரிக்கை அறிவிப்பை மீறி சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற, தனியார் வாட்டர் அட்வென்ச்சர் நிறுவனத்தின் மீது, போலீசார் நேற்று வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.