News April 24, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைத்தானியா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இளம்பெண்களுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் சமூகவலை தளங்களில் முகம் தெரியாத நபர்களின் பிரண்ட்ஸ் ரெகுவஸ்ட் ஏற்றுக்கொள்ளக்கூடாது. முகம்தெரியாத நபரிடம் பேசவேண்டாம். பெண்கள் உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு எந்த ஒரு புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிரவேண்டாம்” என்று எச்சரித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
புதுச்சேரி: பொங்கல் தொகுப்பை வழங்கிய முதலமைச்சர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பை, திலாஸ்பேட்டையில் உள்ள நியாவிலைக்கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துறையின் அமைச்சர் திருமுருகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News January 5, 2026
புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News January 5, 2026
புதுவை: ஒப்பந்த பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

புதுவை மாநிலத்தில் கேலோ இந்திய மையம் நிறுவப்பட உள்ளது. இதில் புதுவை (கால்பந்து), காரைக்கால் (பேட்மிட்டன்), மாகே (கைப்பந்து), ஏனாம் (தடகளம்) என 4 மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 11 மாதத்துக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். director-sports@py.gov.in என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும் என புதுவை விளையாட்டு இளைஞர் நலத்துறை இயக்குநர் சுதாகர் தெரிவித்துள்ளார்.


