News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்
Similar News
News November 6, 2025
புதுவை: சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதயவியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு நாளை (7-11-25) வருகை புரிந்து காலை 9:30 மணி முதல் 12 மணி வரை மருத்துவ சிகிச்சை ஆலோசனைகள் வழங்க உள்ளனர். எனவே காரைக்கால் பகுதி பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
News November 6, 2025
புதுவை: ONGC நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ONGC நிறுவனத்தில் 153 பணியிடங்களில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆகியோர்களுக்கான ஒரு வருட காலத்திற்கான ரூ.9,600 – ரூ.12,300/- உதவித் தொகையுடன் பயிற்சி வாய்ப்புகள் (Apprenticeship) வழங்கப்பட உள்ளன. மேலும் விவரங்களுக்கு ongcapprentices.ongc.co.in என்கின்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
புதுவை கடற்கரையில் கலாட்டா செய்த 3 பேர் கைது

ஒதியஞ்சாலை ஏட்டு முரளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடற்கரையில் 3 பேர் பொது இடத்தில் மது அருந்தியபடி, முகம் சுழிக்கும் வண்ணம் அநாகரீமாக நடந்து கொண்டனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் லாஸ்பேட்டை சரவணன்(22), மகேஷ்வரன் (21), முத்துக்குமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


